அயோத்தி

அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

பிரம்மாண்டமான ராமர் கோவில் ராமர் அவதரித்த இடமான  உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானத்துக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அயோத்தி ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த ரயில் நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லல்லு சிங் அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் “அயோத்தி தாம்” என மாற்றப்படுவதாகத் தெரிவித்து உள்ளார். லல்லு சிங் எக்ஸ் வலைத்தளத்தில் “பொது மக்களின் எதிர்பார்ப்புகளின்படி அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுநாள் இந்த புதிய ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்குச் சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். ‛‛அயோத்தி தாம்” என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தைக் குறிக்கும் சொல் எனக் கூறப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.