விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அவள் படத்தின் இயக்குனர் மில்லன்ட் ராவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா தொடங்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.R.பிரபு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான G.S.விக்னேஷ் எழுதி இயக்குகிறார். ரான் எத்தன் யோஹன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார்.