டில்லி:

விமானநிலையங்களில் விஐபி ஓய்வு அறையை பயன்படுத்துவோர் பட்டியலில் இருந்து பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங்கை நீக்கி விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமானநிலையங்களில் உள்ள முன்பதிவு விஐபி ஓய்வு அறையை பயன்படுத்த 51 பேர் கொண்ட விவிஐபி பட்டியல் அனைத்து விமானநிலையங்களிலும் இடம்பெற்றிருந்தது. இதில் 51வது இடத்தில் சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெயர் இடம்பெற்றிருந்தது.

இது குறித்து இந்திய விமானநிலைய ஆணைய தலைவர் குருபிரசாத் மோகபத்ரா கூறுகையில், ‘‘ராம் ரஹீம் சிங் பெயர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா என்பது குறித்து கடந்த சில தினங்களக் முன்பு அமை ச்சகத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி வந்ததை தொடர்ந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தண்டனை விதிக்கப்படும் வரை சாமியார் ராம் ரஹீம் சிங் பல இடங்களில் விவிஐபி சலுகைகளை அனுபவித்து வந்துள்ளார். இவை அனைத்தும் அந்தந்த துறை அமைச்சக அனுமதியுடன் அனுபவித்து வ ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.