மாஸ்கோ:

ரஷ்யர்கள் லஞ்சம் வாங்குவது சராசரியாக 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் லஞ்சம் தற்போது செழிக்கும் தொழிலாளக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 75 சதவீதம் ஊழல் அதிகரித்து வருகிறது என்று அந்நாட்டில் லஞ்ச ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டில் ஒரு ரஷ்ய அரசு அதிகாரியின் செலவு சராசரியாக 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபெல்ஸ் என்ற நிலையில் இருந்தது என்று ரஷ்யாவின் முன்னணி வர்த்தக நாளிதழான கொமெர்சன்ட் தெரிவித்துள்ளது. ஊழலுக்காக மட்டும் 298 பில்லியன்ஸ் ரூபெல்ஸ் அதாவது 5.1 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது.

கடந்த ஆண்டில் 69 ஆயிரம் லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை தவிர்த்து தான் ஊழலுக்கான செலவு கணக்கீடப்பட் டுள்ளது. ஊழல் அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பதை அந்த நாளிதழ் வெளியிடவில்லை. கடந்த 2014ம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபெல்ஸ் மதிப்பு 50 சதவீதம் குறைந்தது.

உக்ரைனில் ரஷ்ய செயல்பாடு மற்றும் கச்சா எண்ணை விலை காரணமாக இந்த வீழ்ச்சி இருந்தது. ரஷ்யாவில் ஊழல் பல விதங்களில் உள்ளது. ஒரு மூத்த ராணுவ அதிகாரி ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்ததற்காக தண்ணீரில் ஓடும் இரண்டு ஸ்கூட்டர்களை லஞ்சமாக பெற்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த மாத தொட க்கத்தில் சமூக ஆர்வலர் அலெக்சி நவாய்னி என்பவர் பிரதமர் மற்றும் முன்னாள் அதிபரான திம்த்ரி மெத்வேதேவ் அதிக சொத்து க்களை பராமரித்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

டஸ்கனியில் திராட்சை தோட்டம் மற்றும் 2 கப்பல்கள் என அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மெத்வேதேவின் செய்திதொடர்பாளர் மறுத்துள்ளார். பெர்லினை சார்ந்த சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஊழல் மிகுந்த 176 நாடுகளில் ரஷ்யா 136வது இடத்தில் உள்ளது.