ஐப்பான்,

ணுஏவுகணை சோதனைகளை அவ்வப்போது செய்து உலக நாடுகளை மிரட்டி வரும் வடகொரியாவை உளவு பார்க்க ஜப்பான் செயற்கைகோளை செலுத்தியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் புதிய உளவு செயற்கைக்கோளை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏவுகணை தளத்தில் இருந்து H-2A ராக்கெட் மூலம் ரேடார் 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோளில் வடகொரியாவை கண்காணிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த செயற்கைக்கோள்கள் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வடகொரியாவை விண்ணில் இருந்தபடி உளவு பார்க்கும் என்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.