இஸ்லாமாபாத்;

கில்ஜித்-பல்திஸ்தான் பிராந்தியத்தை 5வது தனி மாகானமாக அறிவிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தும் என தெரிகிறது.

பாகிஸ்தானின் உள் மாகான ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஷூசைன் பிர்சாதா, ஜியோ டிவிக்கு அளித்த பேட்டியில், ‘‘வெளியறவு துறை ஆலோசகர் சர்தான் அஜிஸ் தலைமையிலான குழு கில்ஜித் பல்திஸ்தானுக்கு மாகான அந்தஸ்து கொடுப்பது தொடர்பான பரிந்துரையை அளித்துள்ளது.

46 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா&பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதையாக திகழும் இந்த பிராந்தியத்தின் அந்தஸ்தை உயர்த்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்’’ என்றார்.

கில்ஜித் பாகிஸ்தான் தனி புவியமைப்பு கொண்டதாக கருதப்படும். இதற்கு என்று தனியாக மண்டல பிராந்திய சட்டமன்றமும், தேர்வு செய்யப்பட்ட முதல்வரும் இருப்பார்கள். இந்த நடவடிக்கை மூலம் தீர்க்கப்படாத நிலையி இருக்கும் பிரச்னைகள் தொடர்பாக சீனாவுக்கு இருந்த கவலை நீங்கும் என தெரிகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாற்றம் எதிர்காலத்தில் காஷ்மீர் பிராந்திய விஸ்தரிப்புக்கு ஏதுவாக இருக்கும் என்று அந்நாட்டு டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.