மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் இரு குழுவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூக பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைத்து, அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்ரது, இன்று மதுரை கலெக்ட அலுவலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அனைத்து சமுதாய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, 62 பேச்சவார்த்தையில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்ட கமிட்டியை அமைத்ததார். இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டார்.
இந்த 16 பேர் கொண்ட குழுவினர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.