டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும்  பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,  தங்கமங்கை அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கம் சென்று சாதனை படைத்துள்ளர். மற்றொரு போட்டியில், அவருக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் ஆவணி லேகாரா என்ற சாதனையை பெற்றுள்ளார்.

ஏற்கனவே மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில். கலந்துகொண்ட இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்த நிலையில், மகளிருக்கான 50மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் கலந்துகொண்ட தங்க மங்கை  அவனி லெகாரா,  445.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம், பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.