பொறியியல் துணை கலந்தாய்வு: 17ந்தேதி தொடக்கம்!

சென்னை,

பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் துணைகலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து  உடனடித் தேர்வு மூலம்  மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்காக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வரும் புதன்கிழமை (ஆக 16) அண்ணா பல்கலைக் கழகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.  அடுத்த நாளான ஆக 17ல் இருந்து சேர்க்கை நடைபெறும்.

இதையடுத்து, அருந்ததியினர் (எஸ்சிஏ) இடங்களில், தாழ்த்தப்பட்ட (எஸ்சி) பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அன்றைய நாள்  காலை 9 மணி முதல் 10 மணி வரை பல்கலைக் கழகத்துக்கு நேரில் வந்து வருகையைப் பதிவு செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம் என  அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Auxiliary engineering Counseling: 17th Start!, Anna university announced