காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - குஷ்பு

Must read

kusboo
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் நடிகை குஷ்பு இடம் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதில் முதலாவதாக தமிழகத்துக்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, முகுல்வாஸ்னிக், சின்னாரெட்டி, சித்தராமையா, சுசில்குமார் ஷிண்டே, ஆஸ்கார் பெர்னாண்டஸ், சல்மான் குர்ஷித் ஆகியோர் உள்பட 40 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

More articles

Latest article