காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பாமக வேட்பாளர்

Must read

arulmani6666
பா.ம.க வேட்பாளர் சுப.அருள்மணி வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி பா.ம.க வேட்பாளராக கடந்த ஓராண்டுக்கு மேலாக தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த மாநில துணைச் செயலாளர் சுப.அருள்மணி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதி முழுவதும் சென்று கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இரவு கூட்டங்கள் திண்ணை பிரசாரங்கள் நடத்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கீரமங்கலம் கடைவீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் தொடங்கி பேருந்து நிலையம், காந்திஜி சாலை மற்றும் கடைவீதியில் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று வாக்காளர்கள் கால்களைத் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார். கடந்த ஒரு மாதமாக வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

More articles

Latest article