raje
வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட பட்டியல் விவரம்:
1.வேட்பு மனு (படிவம்-2பி);
2. உறுதிமொழிப்படிவம் (படிவம்-26);
3. பாக்கியின்மை சான்றாக கூடுதல் உறுதிமொழிப்படிவம்;
4. சான்றொப்பமிட்ட வாக்காளர் பட்டியல் (வேட்பாளர் வேறு தொகுதியில்
வாக்காளராக இருக்கும்பட்சத்தில்);
5. உரிய அலுவலரிடம் பெறப்பட்ட ஜாதிச் சான்றிதழ் (வேட்பாளர், பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் சார்ந்தவர் என்பதை கோரும்பட்சத்தில்);
6. ரூ.10,000 முன்வைப்புத் தொகை (தனித் தொகுதி எனில் ரூ.5 ஆயிரம்).