சீமானின் சொத்து ரூ.35.36 லட்சம்; கடன் ரூ. 8.97 லட்சம்

Must read

seeman nomination
நடைபெறவிருக்கும் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு ரூ. 35.36 லட்சம் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று மனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு மற்றும் வழக்குகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி அவரது கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 உள்ளது. அவரிடம் ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது. மேலும், 150 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளன. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 ஆகும். அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள சீமான், தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவருக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ள அவரது மனைவி கயல்விழியிடம் கையிருப்பாக ரூ.35 ஆயிரம், பத்திரங்களில் முதலீடாக ரூ.80 ஆயிரம், வங்கிகளில் இருப்பாக ரூ.55ஆயிரம், ரூ.16லட்சம் மதிப்புள்ள கார், 160 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளனவாம். இதன் மதிப்பு ரூ.52,25,031 ஆகும். அசையா சொத்தாக நிலம், வீட்டுமனையாக ரூ.29 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.81.25 லட்சமாகும்.

More articles

2 COMMENTS

Latest article