கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

Must read

kar
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 15-ந்தேதி மதுரையில் தொடங்கி 22-ந்தேதி காஞ்சீபுரத்தில் நிறைவு செய்தார்.
2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 23-ந்தேதி திருவள்ளூரில் தொடங்கினார். நேற்று நெல்லை மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று(புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்கிறார். சென்னை அயனாவரத்தில் உள்ள திரு.வி.க.நகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.பி.கார்த்திகாவிடம் தனது மனுவை அளிக்க உள்ளார்.

More articles

Latest article