நடிகை நமீதா ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம்

Must read

nak
நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’, ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘சாணக்கியா’ உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. இவர் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து, முதல் – அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: –
நமீதா ஆகிய நான் தமிழ் திரைத்துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாக திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பை தர விரும்புகிறேன்.
தங்கள் தலைமையில் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக என்னை சேர்த்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் நடிகை நமீதா கூறி உள்ளார்.

More articles

Latest article