நடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம் செய்து கொண்டனர்

Must read

anu
கன்னட நடிகை அனு பிரபாகர். இவர் தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் ஆகிய படங்களில் நடித்தார். கன்னடத் தில் 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட மூத்த நடிகை யான காயத்ரி மகளான அனுவுக்கும், நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாருக்கும் 2002–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014–ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் அனுவுக்கும் பிரபல கன்னட நடிகர் ரகு முகர்ஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்தார். அவரை பிரிந்து ரகு 2–வதாக பாவனா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவர்.
அனுவும், ரகு முகர்ஜியும் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

More articles

Latest article