காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

Must read

 
kan
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் நாளை காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் நாளை காலை 11 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமை தாங்குகிறார். தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட முன்னால் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் பெற்றுக் கொள்கிறார்.
இந்நிகழ்வில் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ சுந்தர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
மாலையில் பொதுக் கூட்டம்
தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மாலை 6 மணியளவில் வடசென்னை, அஜிஸ் முகமது கௌஸ் தெரு, டி.பி.கே. தெரு சந்திப்பில் (பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகில்) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ சுந்தர், பொருளாளர் டாக்டர் நாசே ராமச்சந்திரன், உ.பலராமன், ஆ.கோபண்ணா, எம். ஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 

More articles

Latest article