ஸ்திரேலியாவில் கடந்தஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய 50டாலர் நோட்டில் எழுத்து பிழை இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சர்சசையை ஏற்படுத்தி உள்ளது. இதன் கரணமாக நோட்டை என்ன செய்வதென்று  அந்நாட்டு அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசு கடந்த 2018ம்ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கூடிய , மஞ்சள், பச்சை வண்ணத்திலான புதிய 50 டாலர் பண நோட்டை வெளியிட்டது. அப்போது முதல் 50டாலர் நோட்டு புழக்கத்தில் உள்ளது.

அந்த நோட்டில் ஆஸ்திரேலியாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எடித் கோவனின் படத்துன், அவரது முதல் நாடாளுமன்ற உரையும் நுணுக்கமாக அச்சிடப்பட்டுள்ளது.

தற்போது அச்சிடப்பட்டுள்ள அவரது உரையில் எழுத்துப்பிழை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த  1921 ஆம் ஆண்டு எடித் கோவன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில், “Responsibility” என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார்.

50டாலர் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள அந்த உரையினுடே உள்ள “Responsibility” வார்த்தையில் ‘i’ என்ற எழுத்து மட்டும் தவறுதலாக விடுபட்டுள்ளது.  இதை சாதாரண பார்க்கும்போதோ, படிக்கும்போதோ கண்டுபிடிக்க முடியாது என்றால், எழுத்து பிழை ஏற்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, அந்த டாலர் நோட்டை என்ன செய்வது என்று அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் திருவாட்டி எடித் கோவனுக்கு முக்கிய இடம் உண்டு. அவர், தம் 60 ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார். சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் பணியாற்றும் சூழலை ஏற்படுத்துவதற்கு நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தவர் திருவாட்டி எடித்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.