ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா இடையே ‘காமன்வெல்த் பேங்க்’ மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மூன்றில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. இரண்டு போட்டியிலுமே ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்துவிட்டது.

Australia playerஇதனால், ஆஸ்திரேலிய அணியிலிருந்து 4 பேர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜோ பர்ன்ஸ், கேலம் ஃபெர்குசன், பீடர் நெவில் மற்றும் ஜோ மென்னி ஆகிய நான்கு பேர் நீக்கம் செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக நான்கு புதுமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடம் வோஜஸுக்கு காயம் காரணமாக ஓய்வு அளித்துள்ளனர். முந்தைய போட்டியில் விளையாடிய ஐவர் மூன்றாவது போட்டியில் இடம்பெற மாட்டார்கள்.

புதுவீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது தோல்வியில் இருந்து தப்புமா எனப் பார்க்கலாம்.