ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸி. வீரர் மாத்தியூ எட்பன் ஜோடி கைப்பற்றியது.
இத்தாலியைச் சேர்ந்த சைமோன் போலெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவஸோரி ஜோடியை 7-6(0), 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் 43 வயதாகவும் ரோஹன் போபண்ணா கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலக ஆண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்த வெற்றியின் மூலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ரோஹன் போபண்ணா – மாத்தியூ எட்பன் ஜோடி.
தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோஹன் போபண்ணாவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.