மெல்போர்ன்,

ஸ்திரேலிய ஓப்பன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு போபண்ணா – பாபோஸ் இணையும் மற்றொரு ஆட்டத்தில்  சானியா – இவான் ஜோடியும் தகுதி  பெற்றுள்ளது.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுக்கு  இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஹங்கேரியின் திமியா பாபோஸ் ஜோடி முன்னேறி உள்ளது.

நடைபெற்ற  கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஹங்கேரியின் திமியா பாபோஸ் ஜோடி,  பிரேசிலின் மார்சலோ டெமாலைனர் – ஸ்பெயின் நாட்டின் மார்ட்டினஸ் சாஞ்சஸ்  ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதலில் இருந்தே போபண்ணா ஜோடி ஆட்டத்தை தங்களது கைக்குள் வைத்திருந்தனர். இதன்படி 7-5, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மார்சலோ டெமாலைனர் – மார்ட்டினஸ் சாஞ்சஸ் ஜோடியை தோற்படித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இறுதி சுற்றில் போபண்ணா – பாபோஸ் ஜோடி, கனடாவின் கேப்ரியலா தாப்ரோவ்ஸ்கி – குரோசியாவின் மேத் பவிக் இணையை எதிர்கொள்ள உள்ளனர்.

அதுபோல் மற்றொரு  கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா –குரோசிய வீரர் இவான் டோடிக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சானியா மிர்ஸாவும், குரோசிய வீரர் இவான் டோடி ஜோடி,  ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டாசுர் – சாம் குரோத் ஜோடியை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.