மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம்.

இவர், ஏற்கனவே காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நாடலை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அரையிறுதிப் போட்டியில், ஜெர்மன் நாட்டின் ஸ்வெரேவை 3-6, 6-4, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். தற்போதைய நிலையில் டொமினிக் தியம் ‘நம்பர் 5’ இடத்திலும், இவரை எதிர்த்து மோதிய ஜெர்மனியின் ஸ்வெரேவ் ‘நம்பர் 7’ இடத்திலும் உள்ளனர்.

முதல் செட், ‍ஸ்வெரேவ் கைக்கு சென்றுவிட்டபோதும், அதற்கெல்லாம் கலங்காத டொமினிக், விரைவில் எழுச்சி பெற்று, அடுத்தடுத்த செட்களை வென்று, கோப்பைக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்