கேன்பெரா:

கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு நிரூபனம் ஆனதால் ஸ்மித், வார்னே, பான்கிராப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. அதோடு மற்ற இருவரும் மீது பல்வேறு நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் டாரன் லேமன் பதவி விலகியுள்ளார்.