மான்செஸ்டர்

மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியா 2க்கு 1 என்னும் கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஆன ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று மான்செஸ்டரில் நடந்தது.   இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.   தொடக்கத்தில் இரு விக்கட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி திணறலுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டவ் பொறுப்பாக ஆடி அணியைச் சரிவில் இருந்து மீட்டார்.  அவர் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.   அதன் பிறகு பில்லிங்ஸ் மற்றும் வோக்ஸ் ஆகியோரும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு ஸ்கோர்களை சேர்த்தனர்.   50 ஓவ்ர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்து இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 303 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கியது.   இந்த அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர்.   ஆஸ்திரேலிய அணி 73 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்திருந்த நிலையில் மாக்ஸ்வெல் மற்றும் கேரி ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் பொறுப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இங்கிலாந்து பஞ்சு வீச்சாளர்கள் இவர்களைப் பிரிக்க மிகவும் திணறினர்.   இருவரும் இணைந்து சதம் அடித்தனர்.  ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் எடுத்த போது 108 ரன்கள் எடுத்திருந்த மாக்ஸ்வெல் அவுட் ஆனார்.   ஆறாவது விக்கட்டுக்கு இருவரும் இணைந்து 212 ரன்கள் சேர்த்தனர்.  கடைசி இரண்டு பந்துகளில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி உள்ளது.