1autrtl 
கான்பெர்ரா:
ந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது.
2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின் பழங்கால அபூர்வ சிற்பங்களை அமெரிக்காவின் தேசிய கலைக்கூடம் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கியது.
இந்த சிலைகளில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரித்தியங்கரா தேவி சிலையும் ஒன்று.இந்த சிலை கடந்த 12 ஆண்டு களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து திருடு போனது குறிப்பிடத்தக்கது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வரும்  பிரத்தியங்கரா தேவி சிலை 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மற்றொரு சிற்பம் 3-ம் நூற்றாண்டில் பாறையில் செதுக்கப்பப்பட்ட புத்தரை வழிபடுவோர் சிற்பம் ஆகும். இன்னொரு சிற்பம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை.
இந்த 3 கலைப்பொருட்களையும் மீட்க இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று சிலைகளை  திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியாவும் ஒப்புக் கொண்டது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு இந்த 3 சிற்பங்களையும் நேற்று கான்பெர்ரா நகரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் ஆஸ்திரேலியாவின் கலைத்துறை மந்திரி மிட்ச் பிபீல்டு முறைப்படி ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரியும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இ மத்திய மந்திரி மகேஷ் ஷர்மா, இந்த 3 கலை சிற்பங்களும் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றார்.