ஆஸ்திரேலியா வெள்ளம்- காரில் சென்ற ஒரே குடும்பத்தினர் பலி

Must read

கான்பர்ரா, 

புயல் மற்றும் தொடர் மழை காரணமாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நதியில் இன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் கடும் மழை, புயல், காரணமாக  குயின்ஸ்லாந்தின்  பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியில் இருந்த 2 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மழை நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தொடர்மழை காரணமாக நியு சவுத் வேல்ஸ் நதியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச்

செல்லப்பட்டது. அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நகரத்தில் ஓடும் பிட்ஷ்ரோய் நதியின் வெள்ளம் 9 மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கிவிட்டன என்றும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் வரும் வியாழன் வரை மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் ரோக்காம்ப்டன் நகரில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புயல் தற்போது நியூசிலாந்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் நிலச்சரிவு ஏற்படும் என்றும் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

 

More articles

Latest article