டி20 உலக கோப்பை போட்டியில் பங்கும் பெறும் அணி விரர்களை அறிவித்து உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதில், முழங்கை காயம் காரணமாக ஓய்வெடுதுது வந்த கேப்டன்  ஸ்டீவ் ஸ்மித் இடம் பெற்றுள்ளார். மேலும் புதிய விக்கெட் கீப்பரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஜப்பானில் திட்டமிட்டபடி, ஒலிம்பிக்போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து. ஆனால், இந்தியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டி20 உலக கோப்பை போட்டி, இங்கு நடத்த முடியாத நிலையில்  ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி போட்டிகள்  ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகள் அக்டோபர் 17ந்தேதி தொடங்கி  நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றன.

அதன்படி,  டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துஉள்ளது. அணியின் கேப்டனராக  ஆரோன் ஃபிஞ்ச் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருடன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். விக்கெட் கீப்பராக புதிய வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஜோஷ் இங்கிலிஷ் என்பவர் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக,  புதிய வரவாக இடம்பெற்றுள்ளார்.

அணி வீரர்கள் விவரம்: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், அகர், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஸாம்பா, ஹேஸில்வுட், ஸ்டாய்னிஸ், ஸ்வப்சன், ஜோஷ் இங்லிஷ்.  மாற்று வீரர்களாக டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் முழங்கை காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார். அதுபோல,  முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள கேப்டன் ஆரோன் பின்ச்சும் அணி கேப்டனாக தொடர்கிறார்.