சென்னை,

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஊதியக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்  இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 -ம் தேதி, சென்னை கடற்கரையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அரசின் பல்வேறு தடைகளைக் கடந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தனர்.

இதன்பிறகாவது எங்களுடன்அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என காத்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை.

இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 ம் தேதி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்.

இதன் பின்னரும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 7 -ஆ=ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தமிழக அரசோ, வேலை நிறுத்தத்தில் பங்குபெறும்  ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படு வார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.