வருமான வரி ரெய்டு என்ற பெயரில் தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்! ஆடிட்டர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம்

Must read

டில்லி:

ருமான வரி ரெய்டு என்ற பெயரில் தேவையற்ற நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டாம், அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் என்று ஆடிட்டர்கள் சங்கம் பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும்  கடிதம் எழுதி உள்ளது.

நாடு முழுவதும் வருமான வரி வசூலிக்க, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு  மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் சோதனையும் நடைபெற்று வருவதால், பல இடங்களில்  அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் கர்நாடக மந்திரிகள் வீடுகளில் நடைபெற்ற சோதனை பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்த மான இடங்களிலும் சோதனை  நடைபெற்றது. மேலும் பல பகுதிகளில் வருமான வரித்துறை யினர் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.

வருமான வரித்துறையினர் சோதனை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பராமரித்து வரும், ஆடிட்டர்கள் அமைப்பு, வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம்தெரிவித்து, அவர்களது அத்துமீறல்களில் இருந்து தங்களை காப்பாற்றுமாறும், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “வரி வசூல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வருமான வரித்துறையினர் தேவையற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று  மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துங்கள் என்று கூறி உள்ளது.

மேலும்,  வரி, வரி பாக்கிகளை வசூலிக்க சட்டப்படி விதிமுறைகள் பின்பற்றப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது வருமான வரித்துறையினர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை, ஒழுங்காக வருமான வரி செலுத்துபவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி  வருகிறது, ஆகவே இதுபோன்ற நடவடிக்கைள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அரசு  வரிச் செலுத்துபவர்க ளுக்கு இணக்கமான அரசாக இருக்க வேண்டும்  என்று கூறியுள்ளனர்.

பாம்பே சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் சொசைட்டி மற்றும் சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் உள்பட சில மாநில ஆடிட்டர்கள் சங்கங்கள் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பி உள்ளன..

More articles

Latest article