மாஸ்கோ:
ஷ்ய அதிபர் புதினை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றதாக உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் குற்றஞ்சாட்டி உள்ளது.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ படையில் சேர விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் உக்ரைன் மீது அதிருப்தி கொண்ட ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஏறத்தாழ 400 நாட்களை தாண்டி ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது.

பல்வேறு நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்து வருகிறது. மேலும் அப்பாவி மக்கள், பலர் இந்த ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். மேலும் சிலர் குண்டு மழைக்கு நடுவே தங்களது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகளை ரஷ்ய வீரர்கள் தேடித் தேடி அழித்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதனிடையே உக்ரைன் மீதும் ரஷ்யா பல்வேறு புகார்களை தெரிவித்து வந்தஜதுஜ. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மீது கொலை முயற்சி நடந்ததாகவும், உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி அதிபர் புதினை கொல்ல திட்டமிட்டதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் தெரிவித்து உள்ளது.