ஜோதியாசி

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.24 லட்சத்துடன் ஏ டி எம் இயந்திரத்தைத் திருடர்கள் கொள்ளை அடித்துள்ளனர். 

பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம்  ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள அங்காடி பகுதியில், உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

அந்த இயந்திரத்தில் அப்போது 24 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.  காவல்துறையினர் இந்த திருட்டு பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  எ டி எம் இயந்திரத்தை இரும்பு சங்கிலி மூலம் பெயர்த்து, திறந்த ஜீப்பில் ஏற்றிச் சென்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.