நெட்டிசன்:
தஞ்சை ராஜேஷ் (Thanjai Rajesh) அவர்களின் முகநூல் பதிவு:
·
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எமது வேண்டுகோள் :
நாளை மறுநாள் 11/11/2016 முதல் ஏடிஎம் மையங்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட இருக்கிறது. அதேநேரம் குறிப்பிட்ட காலம் வரையில் ஒருநாளைய அதிக பட்ச வரம்பு ரூ.2000 எனவும் பின்னர் அது ₹4000 ஆகவும் படிப்படியாக அதிகபட்ச வரம்பு ₹10000 ஆகவும் சில மாதங்களுக்குள் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
எமது கோரிக்கை என்னவென்றால்…
எடுக்கும் பணத்தின் உச்ச வரம்பினை மிகவும் குறைத்துவிட்ட படியால் ஒரு மாதத்தில் அதிக முறை ஏடிஎம் மையங்களை பயன்படுத்த வேண்டி வரும்… ஆகையால் ஏடிஎம் மைய பயன்பாட்டிற்கான அதிகபட்ச உபயோக எண்ணிக்கை ( limitations in usage of ATM centres)தளர்த்தி ஒருவர் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம் களை பயன்படுத்திக்கொள்ளலாம், அதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்…
இதனால் அதிக முறை பயன்படுத்த வேண்டி இருக்கும் நடுத்தர , ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியும் என்று நம்புகிறோம்..