500, 1000  ரூபாய் நோட்டுக்கள்: பதட்டம் வேண்டாம்!: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி

Must read

 
டில்லி:
ற்போது புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, நேற்று இரவு முதல் தங்களிடம் உள்ள 500, 1000  ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் அலைபாய்கிறார்கள்.
0
. நேற்று பிரதமர் மோடி, “இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது” என்றுதான் அறிவித்ததுதான் இந்த பதட்டத்துக்குக் காரணம்.
இந்த நிலையில், “மக்கள் பதட்டப்பட வேண்டாம்” என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர், “இது தேசத்தின் பொருளாதார சீரமைப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போதைய 500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, “ 500 மற்றும் 1000  நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க 50 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.  டிசம்பர் 30-ம் தேதிவரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்”  என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.
 

More articles

Latest article