மக்களவை இருக்கை : சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் பாலு அமர்வார்

Must read

டில்லி

திர்க்கட்சியினர் இடங்களில் முதல் வரிசையில் சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் டி அர் பாலு அமரக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் இடது ஓர இருக்கைகள் எதிர்க்கட்சிகளுக்காக ஒதுக்கப்படுகின்றன.  அதில் ஓர இருக்கையான முதல் இருக்கை மக்களவை துணை சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.    அந்த பதவிக்கான உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படாததால் அந்த இருக்கை காலியாக உள்ளது.  இந்த கூட்டத்தொடர் முடிவுக்குள் அது அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

துணை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்தது காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இருக்கை ஆகும்.  அதற்குப் பிறகு சோனியா காந்தியின் இருக்கை அமைந்துள்ளது.  இந்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இடங்களை மாற்றி அமைப்பது குறித்து விவாதங்கள் நடத்தி வருகின்றன.

இதையொட்டி திமுக உறுப்பினர் டி ஆர் பாலுவுக்கு சோனியா காந்திக்கு அருகில் உள்ள இருக்கை அளிக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.   இது குறித்து டி ஆர் பாலுவின் கருத்தை  கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துள்ளன.  அதே வரிசையில் அடுத்த பிளாக்குகளில் திருணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களும் இருக்கை அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article