கொல்லம்

தொழிலதிபரை நன்கொடை கேட்டு மிரட்டியதற்காக பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கொல்லத்தை சேர்ந்த உள்ளூர் பா ஜ க பிரமுகர் சுபாஷ்.  சவரா என்னும் பகுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவர் மனோஜ்.  சுபாஷ் மனோஜிடம் கட்சிக்கு நன்கொடையாக ரூ. 5000 தரவேண்டும் என கேட்டுள்ளார்.  ஆனால் மனோஜ் ரூ.3000 தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.  இது குறித்து இருவரும் தொலைபேசியில் உரையாடினார்கள்.   போகப் போக வாக்குவாதமாக மாறிய உரையாடலில், சுபாஷ் ஆத்திரத்தில் மனோஜை மிரட்டியுள்ளார்.  அது தவிர பலவித வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.

இந்த தொலைபேசி உரையாடலை மனோஜ் ரிக்கார்ட் செய்துள்ளார்.  இது குறித்து போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.  புகாரை விசாரித்த போலீசார் சுபாஷ் மீது வழக்கு பதிந்துள்ளனர்.   மேலும் இந்த தொலைபேசி உரையாடல் மாநில பா ஜ க தலைவரான கும்மாணம் ராஜசேகரனுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.