பீகாரில் மற்றொரு வங்கி குளறுபடி : ஒருவர் கணக்கில் ரூ.52 கோடி திடீர் வரவு

Must read

பாட்னா

பீகார் மாநிலத்தில் மேலும் வங்கி குளறுபடியால் ஒருவர் கணக்கில் ரூ. 52 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த  சில காலமாகப் பீகார் மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் எனப் பண வரவு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   அவ்வகையில்  பீகாரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு ரூ.5.58 லட்சம் தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தது. இதனை அறிந்த வங்கி நிர்வாகம் அவரிடம் கேட்ட போது, மத்திய அரசு தனது கணக்கில் பணம் போட்டிருப்பதாக நினைத்து அதனைச் செலவழித்து விட்டதாக கூறினார். பின்னர், அந்த நபரை காவல்துறையினர் அண்மையில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக கடிகர் மாவட்டத்தில் இரு பள்ளி மாணவர்கள் கணக்கில் ரூ.962 கோடி செலுத்தப்பட்டிருந்தது.  இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந் ராம் பகதூர் ஷாஎன்பவர் தனது ஓய்வூதியம் குறித்த சில விவரங்களைக் கேட்பதற்காக அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள், அவரது வங்கிக் கணக்கைச் சோதனை செய்தபோது அதில்ரூ.52 கோடி இருப்பது தெரியவந்தது..

ராம் பகதூருக்கும் இதுகுறித்த விவரம் தெரியவில்லை.   இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ராம் பகதூர், “நான் எனது வங்கிக் கணக்கில் 3 ஆயிரம் ரூபாயை விட அதிகமாகப் பார்த்ததில்லை. இப்போது ரூ.52 கோடி இருப்பதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். தவறுதலாகச் செலுத்தப்பட்ட பணம். என்றாலும், எனது வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தொகையில் மிகச்சிறிய பங்கை மட்டும் அரசு எனக்குத் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article