புதுடெல்லி: 
ஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர்.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒன்றில், சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
மற்றொரு தீர்மானத்தில், பஞ்சாப் மற்றும் காங்கிரஸின் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பைச் செலுத்திய அமரிந்தர் சிங்கிற்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கேன் தெரிவித்தார்.