இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 574 ரன்கள் அடித்த நிலையில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.

400 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி இலங்கையை தொடர்ந்து ஆட வலியுறுத்தியது.

ஆட்டம் துவங்கியதில் இருந்தே விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது அஸ்வின் இதுவரை மூன்று விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 435 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் அஸ்வின் ரவிச்சந்திரன்.

434 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் அஸ்வின், 617 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே முதல் இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே கபில்தேவின் மற்றொரு சாதனையை நேற்று 175 ரன்கள் அடித்த ரவீந்திர ஜடேஜா முறியடித்த நிலையில், இன்று ஒரு சாதனை முறியடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.