லண்டன்: பிரிட்டன் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனகா – ஆக்ஸ்போர்டு பல்கலை இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தானது அதிக தாக்கம் வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது என்று சக ஆய்வாளர்களின் தனிப்பட்ட மதிப்பாய்வுகளில் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மருந்து, முதன்முதலாக பிந்தைய நிலை பரிசோதனை முடிவுகளைப் பெற்றுள்ளதோடு, சுதந்திரமான முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவை, மருத்துவ சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.

அந்த மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனையின் இடைக்கால முடிவுகள், ‍‍லேன்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த மருந்து குறித்த ஆய்வுகள், வேறு நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுவதென்பது ஒரு கூடுதல் தகுதியாக கருதப்படுகிறது.

மேற்கண்ட ஆய்வுகளின் மூலம், இந்த மருந்து, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பில் 70% தாக்கம் வாய்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.