கடலை போட்டால் நீண்ட ஆயுளா என்று வியக்க வேண்டாம். கடலைவகைகளைச் சாப்பிட்டால் நீண்ட ஆயுள் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலன் குறித்த அதன் முடிவுகளைத் தெரிந்துக் கொள்வோம்.
அன்றாட உணவில் முந்திரி, கடலை வகைகளைச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது.
அமெரிக்கா: மசகுசெட்ஸ் தலைநகர் பாஸ்டனில் பிரிக்ஹாம் மற்றும் பெண்கள் மருத்துவமனை உள்ளது. இங்கு பணியாற்றும் மருத்துவர் யிங் பாவ் ஹார்வர்ட் மெடிக்கல் கல்லூரியில் பேராசிரியராய் உள்ளார். இவருக்கு இதயநோய்/ நீரிழிவு நோய்க்கும் கடலை சாப்பிடுவதற்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
எனவே இவரது மருத்துவக் குழு , நிலக்கடலை, முந்திரி போன்ற புரதச் சத்துள்ள கடலை வகைகள் குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
அதிக புரதச் சத்துமிக்க கொட்டைகள் சாப்பிடுபவர்கள் குறைந்த அளவு நீரிழிவு நோய்க்கு ஆளாகும் வாய்ப்புள்ளது என அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை புரதக் சத்துள்ள கடலைவகைகளை உட்கொள்வது அழற்சி ஏற்படாமல் தடுக்கும். இந்த அழற்சி (inflammation) தான் நீரிழிவு நோய் உண்டாவதற்கான முக்கிய காரணி ஆகும் என்பதை நான் அறிவேன்” என்கிறார் மருத்துவர் யிங் பாவ்.
1980 முதல் 2010 வரை 76464 பெண்கள் நர்ஸ்களின் உடல்நல அறிக்கைகள், 1986 முதல் 201 வரை 42498 ஆண்களின் உடல்நலன் குறித்த அறிக்கைகள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டன. எனவே, புரதக் கொட்டைகளின் சுகாதார நலன்களை விளக்க உதவும் ஒரு ஆராய்ச்சியை 5,013 நீரிழிவு பாதிக்காத மக்களிடன் சோதனை நடத்தினர் . நடத்தப்பட்ட ஆய்வுகளில் இதய நோய் மற்றும் வகை -2 நீரிழிவு போன்ற கார்டியோ கோளாறுகள் ஏற்படாமல் கடலை வகைகள் தரும் பாதுகாப்பு குறித்து சாதகமான தகவல்களைத் தந்துள்ளது.’ என்றார் யிங் பாவ்.
“எங்கள் புதிய சோதனையின் மூலம் , கடலை வகைகள் இயல்பிலேயே அமைப்புக் அழற்சியை (systematic inflammation) குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் தடுப்பில் ஒரு பங்கு வகிக்கும் ” என பாவ் குறிப்பிட்டார்.
கடலையைச் சாப்பிடுபவர்கள் இதய நோயால் இறப்பது 29% சதவிகிதம் குறைவு. மேலும் 11% கேன்சரால் இறக்கும் வாய்ப்பு குறைகின்றது.
மேலும் இந்த ஆய்வு முடிவுகள் கடலைச் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்று பரவலாய் நம்பப்படும் பொதுக்கருத்தை தவிடுபொடி ஆக்கியுள்ளது.
எனினும், எந்தக் குறிப்பிட்ட கடலை இந்த நீண்ட ஆயுளையும் இதய நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகின்றது என்பதை இந்த ஆய்வில் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இந்த ஆய்வுன் படி, கடலையைச் சாப்பிடுபவர்களை விட, அதிகமாக கடலைச் சாப்பிடுபவர்கள் உடல் எடை கம்மியாய், உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழுகின்றனர்.
இவரது ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ள கட்டுரை.