சென்னை: தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசில் மக்கள் தொடர்பு அலுவலர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் பணி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவித்து, அதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அதன்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்,  ஏதாவது ஒரு பட்டம் என்ற தகுதி மாற்றப்பட்டு, ஊடகம், விளம்பரம் சார்ந்த பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் என்ற விதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.