செய்யாறு:
ருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல அலுவலர்களுடன் இணைந்து 1985 முதல் 1991 வரையிலான கால கட்டத்தில் ரூ. 64,96,291 முறைகேடு செய்துள்ளதாகச் செய்யாறு வேளாண் இணை இயக்குநர்  லாரன்ஸ் அலெக்சாண்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு ஓராண்டு சிறை மற்றும் ₹ 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்ழ்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜ் மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியவர்கள் குமுகுவி சட்டத்தின்படி விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் மூவரிடமிருந்தும் ரூ. 3,00,00 அபராதம் விதிக்கப்பட்டது.