சென்னை: 
மிழக அரசு ஒரே நேரத்தில் 14 ஐ.பி.எஸ்.,  அதிகாரிகளை  இடமாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அனைவரும் அரசையும், போலீசாரையும் காய்ச்சி எடுக்கின்றனர்.
Tamilnadu Police
நாளை ஆரம்பமாக இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பும். இந்த பிரச்சினை  பூதாகாரமாக சபையில் எதிரொலிக்கும்  என தெரிகிறது. அதன் காரணமாக போலீஸ் துறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஐபிஎஸ் அடிதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
செந்தாமரை கண்ணன் – சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,
வி.வரதராஜூ – திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.,
ஜெ. மகேஷ் – தஞ்சை எஸ்.பி.,
பாஸ்கரன் – தேனி எஸ்.பி.,
மயில்வாகனன் – திருச்சி மாநகர சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர்
ஸ்ரீதர் – வட சென்னை சட்டம், ஒழுங்கு ஐ.ஜி.,
சேஷாயி – சென்னை தலைமையக ஐ.ஜி.,
அருணாச்சலம் – சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.,
தாமரை கண்ணன் – சென்னை நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி.,)
சக்திவேல் – சென்னை பூக்கடை துணை கமிஷனர்
செந்தில்குமார் – திருச்சி எஸ்.பி.,)
சுதாகர் – சென்னை அம்பத்துார் துணை கமிஷனர்
செல்வகுமார் – சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர்
ரூபேஷ்குமார் – சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர்