டெல்லி: நடப்பு ஆண்டில் (2023) 9 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று 3 மாநில சட்டமன்ற தேர்தல் அட்டவணையை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகேவல் வெளியாகி உள்ளது.

நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகிள்  முறையே மார்ச் 12, மார்ச் 15 மற்றும் மார்ச் 22 ஆகிய தேதிகளில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, இந்திய  தேர்தல் ஆணையம் (ECI) இன்று (ஜனவரி 18, 2023)  இன்று  நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் அட்டவணையை வெளியிடும் என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த வாரம்,  தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமார் தலைமையிலான குழு கடந்த வாரம் மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநில தலைநகரங்களில்  அரசியல் கட்சிகள் மற்றும் மாநில, மத்திய பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுடன், குறிப்பாக மூன்று மாநிலங்களின் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியது.  அதைத்தொடர்ந்து இன்று தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறது.

தற்போது, திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) கூட்டணி ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது, அதே நேரத்தில் பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பங்காளிகள் — தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) – – முறையே நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் அரசாங்கங்களை வழிநடத்துகிறது.

நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்

தற்போதைய நாகாலாந்து சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் கைகோர்த்து, 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் NDPP 18 இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காவி கட்சி 12 இடங்களைப் பெற்ற பின்னர் அரசாங்கத்தை அமைத்தது. நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 26 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தவறிவிட்டது.

மேகாலயா சட்டசபை தேர்தல்

தற்போதைய மேகாலயா சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2018 தேர்தலில், 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் 21 இடங்களை வென்று தனிப் பெரிய கட்சியாக இருந்தது. எவ்வாறாயினும், அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியுடன் (என்பிபி) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது, ஏனெனில் NPP தனியாக தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

திரிபுரா சட்டமன்ற தேர்தல்

திரிபுரா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 35 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இருப்பினும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் பிரவேசத்தால், வரும் தேர்தல்கள் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.