சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில், இதுவரை 34 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், விதி மீறியதாக 139 வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை தேர்தல்பிரசாரமும் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு 9 தனிப்படைகள் தலைமையில் 108 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான பறக்கும் படைகள், கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருஐகிறது.
மேலும் தேர்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் அதை, காவல்நிலையில் ஒப்படைக்க உத்தரவிட்டப்பட்டது. அதன்படி, சென்னையில், இதுவரை 1,796 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் எல்லையில் தற்போதுவரை (19ந்தேதி இரவு) தேர்தல் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது 139 வழக்குகள் அந்தந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள உரிமையாளர்கள் 1,796 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.
குற்றப்பின்னணி உள்ள 34 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணையுடன் உள்ள 1,751 குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.