டெல்லி: இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  கோவா, உத்தரகாண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்றும் உ.பி.யில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்புர், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதன் முறையாக வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 8.55 கோடிப்பேர். 80 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நன் பாதிக்கப்பட்டோர், கொரோனா தொற்று உடையவர்கள் தபால் ஓட்டை செலுத்தலாம். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரம் ஆகியவை பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 5 மாநிலங்களிலும், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (பிப்ரவரி 14ந்தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.யில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று 2வது கட்ட தேர்தல் நடைபெறுகிறத.  மணிப்பூர்-60, உ.பி – 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

கோவா சட்டமன்ற தேர்தல்

40 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட  கோவாவில்  ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 14-ம் தேதி) நடைபெற்று வருகிறது. 40 இடங்களை கைப்பற்ற 301 பேர் களத்தில் உள்ளனர். அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும், ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும்  போட்டியிடுகின்றன.  முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பா.ஜ.க., வாய்ப்பு அளிக்காத‌தால், பனாஜி தொகுதியில் அவர் தனித்து களம் இறங்கியுள்ளார்.

இந்த தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களுக்க தயாராக உள்ளனர். வாக்குப்பதிவுக்கா  மாநிலம் முழுவதும் ஆயிரத்து 722 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.பாதுகாப்பு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். லை 6 மணி வரை நடைபெறுகிறது.

உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  70 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று (14ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்  152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள்  வாக்களிக்க உள்ளனர்.  தேர்தலுககாக 11,697 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மாநிலத்தில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.  காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் தேர்தலில் தனது வாக்கை செலுத்திய மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,  எங்களின் அனைத்து திட்டங்களும் உத்தரகாண்ட் மக்களுக்கு ஒரு கேடயத்தை வழங்கியுள்ளன; மாநிலத்தின் வளர்ச்சிக்கு யார் உழைக்க முடியும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். உத்தரகாண்ட் மக்கள் பாஜகவுக்கு வாக்காளர்கள், பாஜக 60+ தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் 2வது கட்ட தேர்தல்: 

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில்  ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து 2வது கட்ட தேர்தல் 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் இன்று காலை 7 மிணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 இடங்களை பிடிக்க  584 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இதற்காக கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.