அசாம்:
சாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்.


வட கிழக்கு மாநிலமான அசாமில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

கனமழை காரணமாக, 10 மாவட்டங்களில் நேற்று முன்தினம் வரை 37,000 பேர் பாதிப்படைந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. குவஹாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்தும் அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்.