அசாம்:
சாம், நேபாள எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாமில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்  பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மழையின் காரணமாக அசாமில் உள்ள அனைத்து ஏரி, அணைகள் நிரம்பி வழிகின்றன.
assam-1
இந்திய எல்லையை ஒட்டியுள்ள நாடான நேபாளத்திலும் கன மழை பெய்து வருகிறது.
இந்த வருடம் வரலாறு காணாத அளவுக்க பருவமழை பொழிவதால் அசாம் மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. பருவமழை காரணமாக காட்டாற்று வெள்ளம், ஆறுகளில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக  பல கிராமங்களையும், விவசாய நிலங்களையும் மூழ்கடித்து உள்ளது.
இந்த மழையால் லட்சக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உயரமான பகுதிகளுக்கு  இடம் பெயர்ந்து சென்றனர்.
அசாம் மாநில மீட்பு குழுவினர், பீகார் மாநில மீபபு குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தாங்குவதற்கு நெடுஞ்சாலைகளிலும்,  உயரமான பகுதிகளிலும்  தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.