திஸ்பூர்

ன்றைய ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதி போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாகச் சென்ற வருடம் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது.

இந்தப் போட்டிகளில் இன்று குத்துச் சண்டை அரையிறுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது.  இந்த அரையிறுதியில் கலந்துக் கொள்ள இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா பங்கேற்க உள்ளார்.

இந்த போட்டியைக் காண இன்று அசாம் மாநில சட்டப்பேரவை 20 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  காலிறுதி போட்டியில் வென்றதன் மூலம் எல்லினா ஏற்கனவே வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.