சென்னை,
வாடகை பாக்கி காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மனைவி நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளிக்கு, இடத்தின் உரிமையாளர் அதிரடியாக பூட்டுபோட்டுள்ளார். இதை எதிர்த்து, 5 கோடி நஷ்ட ஈடுகேட்டு ரஜினியின் கமள் சவுந்தர்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.
கிண்டி ரேஸ் கோர்சில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரமம் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிட வாடகை பாக்கி பல ஆண்டுகளாக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வாடகை பாக்கி பல கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், கட்டிட உரிமை யாளர் பள்ளியை காலி செய்ய வலியுறுத்தி பள்ளி கட்டிடத்திற்கு பூட்டு போட்டார்.
இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆஸ்ரம் பள்ளிக்கு சீல் வைத்ததை அகற்றவும், அவதூறு கருத்துகள் தெரிவித்த தற்காகவும், கட்டி உரிமையாளர்கள் ரூ.5 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று ரஜினி மகள் சவுந்தர்யா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.